\
இணைய உலகை கலக்கும் பாட்டில் மூடி சேலஞ்ச்

இணைய உலகை கலக்கும் பாட்டில் மூடி சேலஞ்ச்

இணைய உலகை கலக்கும் பாட்டில் மூடி சேலஞ்ச்
Published on: 

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போல தற்போது பாட்டில் மூடி என்ற புதிய சேலஞ்ச் இணையத்தில் பரவி வருகிறது.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் என பல்வேறு சவால்கள் தோன்றி மறைந்ததை நாம் கண்டிருக்கிறோம். அந்த வகையில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது பாட்டில் மூடி சேலஞ்ச். கஜகஸ்தானை சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின், தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க மூடி மட்டும் தனியாக தெறித்து பறக்கும் வகையில் பேக் கிக் (back kick) முறையில் பாட்டிலை உதைக்கும் வீடியோவை வெளியிட்டார்.

இதனை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விடுக்க, சமூகவலைதளங்களில் பாட்டில் மூடி சேலஞ்ச் ட்ரெண்டாகி விட்டது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை வொயிட்னி கம்மிங்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாட்டில் மூடி சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்து சமூகவலைதளங்களில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com