அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் சிறுமி ஒருவர் தோல் உதிரும் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
டென்னசி மாகாணத்தில் உள்ள ஓல்டுவா பகுதியை சேர்ந்த மேகன் மற்றும் டைசன் தம்பதியின் ஆறு வயது குழந்தை ஹன்னா பரொட். இவர் தோல் உதிரும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹன்னா பிறந்ததில் இருந்தே தோல் உதிரும் பிரச்னை இருப்பதாக சிறுமியின் பெற்றொர் கூறுகின்றனர். தோல் மிக வேகமாக முதிர்ச்சி அடைந்து, பின் அது வறண்டு உதிர்ந்துவிடும் எனவும் தெரிவிக்கின்றனர். பல சிகிச்சை மேற்கொண்டும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுமியின் நிலை குறித்து கேள்வி எழுப்புபவர்களிடம் விளக்கம் அளிப்பதே தங்களுக்கு பெரும் மனவேதனையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை அவரது தோலை ஈரப்படுத்த வேண்டும். மேலும் அவரது தோலுக்கு வியர்வை வராமல் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் அவளுக்கு மயக்கம் ஏற்படும். இப்படியே இது தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் ஹன்னாவின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மரபணு சம்பந்தமாக ஏற்படும் இந்த தோல் நோய், உலகில் 6 லட்சம் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே வரும். இந்த நோயை கட்டுப்படுத்த தினசரி இரண்டு முறை லோஷன் பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோய் தீவிரமடைந்தால் சருமம் உலர்ந்து வெடிப்புகள் உருவாகும் அபாயம் ஏற்படும்’ கூறுகின்றனர்.