சீனாவில் பெண் ஒருவருக்கு கருவில் இருக்கும் குழந்தை உதைத்ததால் தாயின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்தவர் ஷாங்க். 35 வயதுள்ள இந்த பெண்மணி நிறைமாத கர்ப்பிணி. கடந்த சில நாட்களாக இவரின் வயிற்றில் அதிக அளவில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் வயிற்றில் குழந்தை உதைத்த வேகமும் அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் குழந்தை வேகமாக உதைத்ததில் ஷாங்கின் வயிற்றில் சிறிய அளவில் துளை விழுந்துள்ளது. இதையடுத்து அவர் வயிற்றில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளிவர தொடங்கி இருக்கிறது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஷாங்கின் வயிற்றில் சிறுநீர் பை நீக்கத்திற்காக செய்த ஆப்ரேஷனால், வயிற்றின் சில பகுதிகள் வலிமை இல்லாமல் இருந்துள்ளன. இதனால் குழந்தை உதைத்தவுடன் வயிற்றில் துளை உருவாகியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்ப காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தை உதைப்பதை ரசிப்பதற்காக பல தாய்மார்கள் ஆவலாக காத்திருப்பார்கள். ஆனால் ஷாங்கின் வாழ்க்கையில் அது எதிர்மறையாக அமைந்துள்ளது அவரின் குடும்பத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது குழந்தையும் - தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.