\
2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த இளைஞர் 

2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த இளைஞர் 

2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தை - தாங்கிப் பிடித்த இளைஞர் 
Published on

துருக்கியில் ‌2ஆவது‌ மாடியில் இருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இஸ்தான்புல் நகரில் குழந்தை ஒன்று கிழே விழுந்த நிகழ்வுக்கான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஸாபாட் என்பவர் அதே தெருவில் வீட்டின் 2ஆவது மாடி ஜன்னலில் பெண் குழந்தை ஒன்று சிக்கிக் கொண்டதை பார்த்துள்ளார். குழந்தை கீழே விழும் அபாயம் இருப்பதை உணர்ந்து அங்கு வந்த அவர், குழந்தையை கேட்ச் பிடித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். 

குழந்தையை காப்பாற்றிய ஸாபாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதிருஷ்டவசமாக 2வயது பெண் குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அக்குழந்தை நலமுடன் இருப்பதாக அதன் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் அக்குடும்பத்தினர் குழந்தையை காப்பாற்றிய ஸாபாட்டிற்கு 200 துருக்கி லிராஸ் கொடுத்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com