பிறந்து சில மணி நேரங்களே ஆன குட்டியானை ஒன்றின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிலத்தில் வாழும் பெரிய விலங்கினம் யானை. ஆனால் இவற்றின் வாழ்க்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா ஒரு நெகிழ்ச்சியான தகவலுடன் ஒரு வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில்,“ஆயிரம் மைல்கள் பயணிப்பதற்கான முதல் அடி தொடங்கியுள்ளது. இந்தக் குட்டி யானை எழுந்து நிற்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. மேலும் இது மெதுவாக எழுந்து வாத்து நடை போட சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. பிறக்கும் போது குட்டி யானை மூன்று அடி அளவு உயரம் இருக்கும். இவற்றின் பிறப்பு 99 சதவீதம் இரவில் மட்டுமே நடக்கின்றன” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த சமூகவலைத்தள வாசிகள் அற்புதமாக உள்ளது என்று கூறி கருத்திட்டு வருகின்றனர்.