\
மீட்புக் கப்பலில் பிறந்த ’மிராக்கிள்’!

மீட்புக் கப்பலில் பிறந்த ’மிராக்கிள்’!

மீட்புக் கப்பலில் பிறந்த ’மிராக்கிள்’!
Published on

லிபியாவிலிருந்து அகதிகளுடன் இத்தாலிக்குச் சென்ற மீட்புக் கப்பலில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. 

லிபியாவில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளு க்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் உதவி கோரி நடுக்கடலில் தத்தளித்த மக்களை மீட்டுக் கொண்டு இத்தாலி கப்பல் ஒன்று கேட்டேனியா துறைமுகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அவர்களுடன் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கப்பலிலேயே ஆண் குழந்தை பிறந்தது. 

இதைக் கப்பலில் இருந்தவர்கள் சோகத்தை மறந்து பாரம்பரிய ஓசை மற்றும் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர். அந்த குழந்தைக்கு அதிசயம் என பொருள் தரும் ’மிராக்கிள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com