சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை: எங்கும் புகைமண்டலம்!

சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை: எங்கும் புகைமண்டலம்!

சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை: எங்கும் புகைமண்டலம்!
Published on

சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலை அடுத்து ஆறு இடங்களில் குண்டு சத்தம் கேட்டதாகவும் இதன் காரணமாக டமாஸ்கஸ் நகர் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சிரியாவின் டவ்மாவில் சமீபத்தில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதலை அடுத்து பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் உடன் இணைந்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. சிரியாவில் ரசாயன ஆயதங்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். 

சிரியா அரசு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை கைவிடும் வரை தாக்குதல் தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் தங்கள் படைகளும் ஈடுபடுவதை உறுதி செய்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் டமாஸ்கஸ் நகரில் குண்டு மழை பொழிந்துள்ளது. ஆறு இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் விழுந்ததாகவும் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய புகைப்படத்தையும் சிரியா அரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

சிரியா மீதான அமெரிக்க கூட்டணி நாடுகள் தாக்குதலால் ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவு மேலும் சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com