78 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்!

78 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்!

78 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்!
Published on

ஆஸ்திரேலியாவில் 78 ஆண்டுகளுக்குப் பின்னர் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வெறு நாடுகளில் கடும் பனிப்பொழிவு தாக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் சுட்டெரிக்கும் வெப்பம் நிலவிவருகிறது. பெருவாரியான நகரங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் நிலவிவருகிறது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள பென்ரித் நகரில் 47.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. 

இது 1939ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிலவும் கடுமையான வெப்பம் என வானிலை ஆய்வகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் வெப்பத்தை தனிக்க மக்கள் நீச்சல் குளங்களில் முகாமிட்டுள்ளனர். வெப்ப அதிகரிப்பால் தானியங்கி இயந்திரங்கள், போக்குவரத்து விளக்குகள் வேலை செய்யவில்லை. சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com