இரட்டை குடியுரிமை வழக்கு: ஆஸி. துணை பிரதமர் மற்றும் 4 எம்.பி.க்கள் தகுதி நீக்கம்

இரட்டை குடியுரிமை வழக்கு: ஆஸி. துணை பிரதமர் மற்றும் 4 எம்.பி.க்கள் தகுதி நீக்கம்

இரட்டை குடியுரிமை வழக்கு: ஆஸி. துணை பிரதமர் மற்றும் 4 எம்.பி.க்கள் தகுதி நீக்கம்

ஆஸ்திரேலிய துணை பிரதமர் ‌பர்‌னபி ஜாய்ஸ் மற்றும்‌ நான்கு அரசியல்‌வாதிகளை தகு‌தி நீக்கம் செய்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசமைப்பு சட்டப்படி இருநாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்கள், எம்.பி. பிரதமர் உள்ளிட்ட பதவிகளை வகிக்க முடியாது. இந்நிலையில், நியூசிலாந்து குடியுரிமை பெற்ற பர்னபி‌ ஜாய்ஸை து‌ணை பிரதமர் பதவியில் இருந்து நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல் பிரிட்டன் குடியுரிமை பெற்‌ற ஃபியோனா நாஷ் மற்றும் மால்கம் ராபர்ட்ஸ், கனடா குடியுரிமை பெற்ற லாரிஸா வாட்டர்ஸ், நியூசிலாந்து குடியுரிமை பெற்ற ஸ்காட் லுடாம் உள்ளிட்ட எம்.பி.க்கள் மீதும் இரட்டை குடியுரிமை வழக்கு தொடர‌ப்பட்டது. இவ்வழக்குகளை ஒன்றாக விசா‌ரித்த உயர் நீதிமன்றம், துணை பிரதமர் பர்னபி ஜாயஸ் உள்ளிட்ட ஐந்து பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ஜாயஸ் தகுதி நீக்கம்‌செய்யப‌பட்டதால், ஆஸ்‌திரேலிய அரசுக்கு பெரும்பான்மை பலம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இடைத்தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com