இளம் வயதினரை கடத்திக் கொல்லும் ஆஸ்திரேலிய சீரியல் கில்லர் மரணம்!

இளம் வயதினரை கடத்திக் கொல்லும் ஆஸ்திரேலிய சீரியல் கில்லர் மரணம்!

இளம் வயதினரை கடத்திக் கொல்லும் ஆஸ்திரேலிய சீரியல் கில்லர் மரணம்!
Published on

ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டு யாத்ரீகர்களை கடத்திக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட ’சீரியல் கில்லர்’ இவான் மிலட் கேன்சரால் மரணமடைந்தார்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ளது பெலங்கோ காடு. இங்கு கடந்த 1992-ஆம் ஆண்டு, செடி கொடிகளுக்கு அடியில் ஓர் உடல் கிடப்பதை இரண்டு பேர் பார்த்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நடத்திய சோதனையில் சில அடி தூரத்திலேயே இன்னும் ஒரு உடல் கிடந்தது. அது, 5 மாதத்துக்கு முன் சிட்னியில் இருந்து காணாமல் போன கரோலின் கிளார்க் (21), ஜோயன்னே வால்டர்ஸ் (22) ஆகியோரின் உடல்கள் என்பது தெரியவந்தது. 

பின்னர் 1993 ஆம் ஆண்டு அதே காட்டுக்குள் மேலும் இரண்டு உடல்களை, விறகு வெட்ட சென்றவர்கள் கண்டு போலீசிடம் கூறினர். அது மெல்போர்னில் இருந்து 1989 ஆம் ஆண்டு காணாமல் போன டெபோரா எவரிஸ்ட் (19) ஜேம்ஸ் ஜிப்சன் ஆகியோரின் உடல்கள் எனத் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் அந்த காட்டில் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது 1991 ஆம் ஆண்டு காணாமல் போன, ஜெர்மனைச் சேர்ந்த சைமன் (21), அஞ்சா ஹப்ஸீட் (20), கபோர் (21) ஆகியோரின் உடல்கள் கிடைத்தன. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காட்டுக்குள் மேலும் சோதனையிட முடிவு செய்தனர். இதற்காக 300 போலீசார் 3 மாதமாக காட்டில் தேடுதலைத் தொடர்ந்தனர். 

இந்நிலையில் இந்தக் காட்டுப் பகுதியில் பிரிட்டீஷ் யாத்ரீகர், பால் ஆனியன்ஸ் என்பவரை ஒருவர் கொல்ல முயன்றார். அவரிடம் இருந்து தப்பிய ஆனியன்ஸ், போலீசில் புகார் செய்தார்.

அவரது புகாரை அடுத்து போலீசார், நெடுஞ்சாலை பணியாளர் இவான் மிலட் என்பவரை 1994 ஆம் ஆண்டு கைது செய்தனர். இரண்டு மாதமாக அவரது நடவடிக்கைகளை கண்காணித்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து துப்பாக்கிகள், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தன்னை கவுபாய் என்று அழைத்துக்கொள்ளும் அவர், சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தின.

காணாமல் போன மேலும் சில வெளிநாட்டு யாத்ரீகளையும் அவர்தான் கொன்றிருப்பார் என்றும் கூறப்பட்டது.இதையடுத்து அவருக்கு ஏழு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கேன்சருக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். 

கடைசிவரை தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை மிலட். அவரோடு சேர்ந்து உண்மைகளும் இறந்துவிட்டதாக அங்குள் ளவர்கள் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com