ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்... வெடித்தது சர்ச்சை

ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்... வெடித்தது சர்ச்சை
ஆட்டுக்கறி விளம்பரத்தில் விநாயகர்... வெடித்தது சர்ச்சை

விநாயகர் ஆட்டுக்கறியை சாப்பிட்டு விளம்பரபடுத்தும் வகையில் வெளியாகியுள்ள விளம்பரத்துக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனமான Meat and Livestock Australia (MLA) சர்ச்சைக்குரிய ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. விருந்து நடக்கும் டேபிளில் விநாயகர், இயேசு, புத்தர் போன்ற வேடங்கள் அணிந்த நபர்கள் அமர்ந்து அவர்கள் ஆட்டுக் கறியின் பெருமையை பேசி சாப்பிடுவது போல விளம்பரத்தி உள்ளது. 

இந்து கடவுளான விநாயகரை அவமதிப்பதாக இந்த விளம்பரம் உள்ளது என ஆஸ்திரேலியாவில் வாழும் இந்து சமூகத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை திரும்ப பெறவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் பலர் இந்த விளம்பரம் தொடர்பான தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் 

அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், உங்கள் நம்பிக்கையை மீறி ஆட்டுக்கறி உங்களை ஒன்றிணைக்கும் என்பதையே விளம்பரத்தில் கூறியுள்ளோம். மத நம்பிக்கைகளையும் மீறி இன்றைய காலக்கட்டத்தில் உள்ள உணவுத் தேவைகளையே நாங்கள் விளம்பரத்தில் கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com