ஆங் சான் சூச்சியை சந்திக்கிறார் மோடி: ரோஹிங்யா பிரச்னை குறித்து பேசுகிறார்?

ஆங் சான் சூச்சியை சந்திக்கிறார் மோடி: ரோஹிங்யா பிரச்னை குறித்து பேசுகிறார்?
ஆங் சான் சூச்சியை சந்திக்கிறார் மோடி: ரோஹிங்யா பிரச்னை குறித்து பேசுகிறார்?

மியான்மர் நாட்டிற்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி, ரோஹிங்யா இஸ்லாமியர் விவகாரம் குறித்து ஆங் சான் சுச்சியுடன் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அந்நாட்டுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு நாளை மியான்மர் செல்லும் மோடி, அங்கு ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

ரோஹிங்யா இஸ்லாமியர் விவகாரம் தொடர்பாக அப்போது இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஆங் சான் சூச்சியின் தந்தையும் தேசியவாதத் தலைவருமான ஆங் சானின் நினைவிடம், பிரபலமான இந்து சமய ஆலயம், பகதூர் ஷா தர்கா ஆகிய இடங்களுக்கும் மோடி செல்ல இருக்கிறார். இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com