ஆடிகாரில் சாய்ந்தபடி வாழைப்பழம் சாப்பிடும் சிறுமியின் விளம்பரத்திற்காக மன்னிப்புகேட்டது ஆடி கார் நிறுவனம்.
ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தன்னுடைய புதிய ரக காரின் விளம்பரத்திற்காக காரின் முன்பகுதியில் சாய்ந்தபடி ஒரு சிறுமி வாழைப்பழத்தை சாப்பிடுவது போன்ற படத்தை பகிர்ந்து “உங்கள் இதய துடிப்பை அதிகரிக்கிறது - ஒவ்வொரு அம்சத்திலும்” என்ற வாசகத்தையும் எழுதியிருந்தது.
இந்த படம் பொருத்தமற்றது, ஆபத்தை தூண்டுவது, பாலியல் ரீதியிலானது என்று சமூக வலைத்தள பதிவர்கள் பலரும் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியதால் இப்போது ஆடி நிறுவனம் இவ்விளம்பரத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.