உலகம்
முஸ்லிம்கள் மீது வேனை ஏற்றி தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு
முஸ்லிம்கள் மீது வேனை ஏற்றி தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு
லண்டனில் மசூதி அருகே நடந்து சென்றவர்கள் மீது வேனை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
லண்டனில் மசூதிக்கு அருகே நடந்து சென்றவர்கள் மீது வேனை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மசூதியில் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள். உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக 48 வயது மதிக்கத்தக்க ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இஸ்லாமியர்களைக் கொல்லப் போவதாக கத்திக் கொண்டே தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் பிடிபட்டார். இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.