எல்லை பற்றிப் பேச சரியான சூழல் இல்லை: சீனா

எல்லை பற்றிப் பேச சரியான சூழல் இல்லை: சீனா
எல்லை பற்றிப் பேச சரியான சூழல் இல்லை: சீனா

இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், இருநாட்டுத் தலைவர்களும் அதுகுறித்து பேச இது சரியான சூழல் இல்லை என சீனா அறிவித்துள்ளது. 

இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கும் ஜி-20 உச்சிமாநாடு ஜெர்மனி ஹம்பர்க் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி, இந்த மாநாட்டிற்கிடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. அப்போது, சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-சீனா-பூடான் எல்லையில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர, இரு நாட்டுத் தலைவர்களும் பேசலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேச தற்போது உகந்த சூழல் இல்லை என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லையில் இருநாட்டு ராணுவமும் படைகளை குவித்துள்ளதால் 20 நாட்களாகப் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com