\
சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்... 10 ஈரான் ஆதரவாளர்கள் பலி?

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்... 10 ஈரான் ஆதரவாளர்கள் பலி?

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்... 10 ஈரான் ஆதரவாளர்கள் பலி?
Published on

சிரியாவின் டியிர் இசோர் மாகாணத்தில் அமைந்துள்ள அல்பு கமல் பகுதியில் நேற்று இஸ்ரேல் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட  போராளிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

இதனை போர் குறித்து கண்காணித்து வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதலில் ஈரானை சேர்ந்த எட்டு பேரும், சிரியாவை சேர்ந்த இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அதோடு அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் இஸ்ரேலிய விமானப்படை ஆகாயத்திலிருந்து குண்டு போட்டு தகர்த்துள்ளது.

முன்னதாக கடந்த 3 ஆம் தேதியன்று சிரியாவின் கிழக்கு பகுதியில் இருந்த 16 கிளர்ச்சியாளர்களை இஸ்ரேல் விமானப்படை கொன்றது. 

சிரியாவில் கடந்த 2011 முதல் உள்நாட்டு போர் நடைபெற்று  வருகிறது. இந்த போரில் சுமார் 380000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அடைக்கலம் தேடி மாற்று இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com