ட்ரம்ப் அலுவலகத்திலும் இப்படித்தானா.... பெண்களை விட ஆண்களுக்கு சம்பளம் அதிகம்
வெள்ளை மாளிகையில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஆண் ஊழியர்களை விட குறைவான சம்பளமே கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு எந்த துறையிலும் அதிக சம்பளம் இல்லை என்பது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் தான் என்பது கன்சர்வேடிவ் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு ஆண்களை விட 37% குறைவாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆதாவது, ஒரு ஆணுக்கு மாதம் 10000 டாலர்கள் எனில் பெண்களுக்கு வெறும் 6300 டாலர்களே வழங்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஆண்களிடமே பெண்களை விட மிக முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. எனவே தான் ஆண்களுக்கு அதிக சம்பளம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் ஆண்களை விட பெண்களுக்கு 37% குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டது ட்ரம்ப் ஆட்சியிலே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஆண்களை விட பெண்களுக்கு 17% குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.