“83 வயதில் நான் ஆஸ்கர் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை!” - ஆண்டனி ஹாப்கின்ஸ்

“83 வயதில் நான் ஆஸ்கர் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை!” - ஆண்டனி ஹாப்கின்ஸ்

“83 வயதில் நான் ஆஸ்கர் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை!” - ஆண்டனி ஹாப்கின்ஸ்
Published on

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ‘தி ஃபாதர்’ படத்தில் நடித்த அந்தோணி ஹாப்கின்ஸ் பெற்றுள்ளார். அவரை திரை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வரும் நிலையில் “83 வயதில் ஆஸ்கர் விருதை வெல்வேன் என ஒருபோதும் எண்ணவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். 

“நான் இதை எதிர்பார்க்கவில்லை. அதுவும் 83 வயதில் ஆஸ்கர் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை. எனக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி. இந்த விருதை நான் Chadwick Bosemanக்கு சமர்பிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. நான் வயதானவனாக நடிக்கவில்லை. ஏன் என்றால் நான் வயதானவன்” என ஆண்டனி ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார். 

இது சிறந்த நடிகருக்காக அவர் வெல்லும் இரண்டாவது ஆஸ்கர் விருது. இதற்கு முன்னதாக 1991இல் வெளிவந்த The Silence of the Lambs படத்தில் நடித்து அவர் ஆஸ்கர் விருதை வென்றிருந்தார். அதோடு ஆஸ்கர் விருதை வென்ற ‘மிக வயதான பெரியவர்’ என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com