ஆப்கான் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

ஆப்கான் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்
ஆப்கான் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

ஆப்கன் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் 95 பேர் உயிரிழந்தனர். 

ஆம்புலன்ஸில் மறைத்து கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள், காவல்துறை சோதனைச் சாவடியில் வெடிக்க வைக்கப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை கட்டடங்கள் அனைத்தும் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று அதிர்ந்தன. இதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர். கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நாலா பக்கமும் சிதறின.

தாக்குதலில் 158 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த வாரம் சர்வதேச சொகுசு விடுதியிலும் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஆப்கனில், அந்நாட்டு அரசுப் படைக்கு உதவி வரும் அமெரிக்கா, தலிபான்களுக்கு எதிரான வான் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலிபான்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com