\
அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் பலி

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் பலி

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 58 பேர் பலி
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில்‌ 58 பேர் உயிரிழந்தனர். 

150 அகதிகளுடன் மவுரித்தானியா நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் தத்தளித்து கொண்டிருந்த 85 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அளவுக்கு அதிகமானோர் படகில் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com