\
கிறிஸ்துவ பக்தர்கள் உடல் கருகி பலி

கிறிஸ்துவ பக்தர்கள் உடல் கருகி பலி

கிறிஸ்துவ பக்தர்கள் உடல் கருகி பலி
Published on

மடகாஸ்கரில் கிறிஸ்தவ பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து பல நூறு அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் உயிரிழந்த‌னர். 

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து  அந்நாட்டின் மத்திய நகர் பகுதியான மகாஜங்கா என்ற இடத்தில் நடைபெறும் கிறிஸ்தவ விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள்‌ பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து மடகாஸ்கரின் மலைப்பகுதியில் ஏறிக்கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்த விபத்தில் 34 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com