நிலச்சரிவில் சிக்கி சீனாவில் 33 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ (Guizhou) மாகாணத்தின் லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமத்தில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழையால் பெய்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்தன. அவற்றில் 23 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததாகவும், 11 பேர் வரை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்த நிலையில் தற்போது அது 33 ஆக அதிகரித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் காணாமல் போனதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.