earth quake
earth quakeFB

ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை.. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்.. பீதியில் மக்கள்..!

ரஷ்யாவின் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

ரஷ்யாவின் தென்கிழக்கு கடற்கரையில் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு வலுவான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டடுள்ளது.. அப்படி தொடர்ந்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாலும் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.. கம்சட்கா பிராந்தியத்தில், இன்று மட்டுமே தொடர்ந்து 6.7, 5 மற்றும் 7.4 என ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டது.

அடுத்தடுத்து விரைவாக அளவிடப்பட்ட அந்த நிலநடுக்கங்களில் மிகவும் வலிமையானது, ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் பதிவானது அதிர்ச்சியை அளித்தது. வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க மாநிலமான ஹவாய்க்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.. ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டு குவாம் மற்றும் அமெரிக்க சமோவாவிற்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் அவையும் ரத்து செய்யப்பட்டடு, பின்னர் ரஷ்யாவிற்கான எச்சரிக்கை விடப்பட்டது.. அதுவும் தற்போது திரும்பப் பெறப்பட்டன.

earth quake
earth quake

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி (United States Geological Survey), அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலாவது 5.0 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 6.7 ரிக்டர் அளவிலும், கடைசியாக 7.4 ரிக்டர் அளவிலும் பதிவானது, இது மற்ற அளவீடுகளின்படி ஒரு பகுதி அதிகமாகும். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகருக்கு வெளியே, பசிபிக் பெருங்கடலில் உள்ள மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் 'ஆபத்தான சுனாமி அலைகள்' ஏற்படும் என்று எச்சரித்தது.

earth quake
அதிபர் ட்ரம்புக்கு கண்டறியப்பட்ட நோய்.. வெள்ளை மாளிகை தகவல்!

அந்த நகரத்தில் சுமார் 160,000 மக்கள் வசிக்கின்றனர். ரஷ்ய கடற்கரைகளில் 30 சென்டிமீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை அலை உயரம் எதிர்பார்க்கப்படுவதாகவும், ஜப்பான் மற்றும் ஹவாயில் 30 சென்டிமீட்டருக்கும் குறைவாக அலைகள் எழும்பும் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com