பிரேக் பிடிக்காததால் பல்டி அடித்த பஸ்: 27 பேர் பரிதாப பலி!

பிரேக் பிடிக்காததால் பல்டி அடித்த பஸ்: 27 பேர் பரிதாப பலி!

பிரேக் பிடிக்காததால் பல்டி அடித்த பஸ்: 27 பேர் பரிதாப பலி!
Published on

பிரேக் பிடிக்காத காரணத்தில் மலை பாதையில் பலமுறை சுற்றுலா பேருந்து உருண்டு விழுந்ததில் 27 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவாவின் தெற்கு தங்கரங்க் பகுதியை சேர்ந்த சுமார் 40 பேர் மேற்கு பகுதிக்கு ஒரு தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றனர். சுபாங் மாகாணத்தின் மலைப் பகுதியில் பேருந்து வேகமாக வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த பைக்கில் பேருந்து மோதியது. இதில் நிலைதடுமாறிய பேருந்து, மலைப் பகுதியில் பலமுறை உருண்டு விழுந்தது. அதில் இருந்தவர்கள் அலறித் துடித்தனர். இதில் பேருந்தில் இருந்த 27 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 16 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிரேக் பிடிக்காததால் பேருந்து கவிழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com