பெருமழையால் தத்தளிக்கும் சீனா: வெள்ள பாதிப்புகளுக்கு 25 பேர் உயிரிழப்பு

பெருமழையால் தத்தளிக்கும் சீனா: வெள்ள பாதிப்புகளுக்கு 25 பேர் உயிரிழப்பு
பெருமழையால் தத்தளிக்கும் சீனா: வெள்ள பாதிப்புகளுக்கு 25 பேர் உயிரிழப்பு

சீனாவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. ஹனான் மாகாணத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால் பாதிப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சீனா முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெள்ள பாதிப்புகளில் சிக்கித் தவிக்கிறது. ஹனான் மாகாணத்தில் வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் 25 பேர் இறந்துள்ள நிலையில் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தின் வேகத்தில் படகுகள் போல் மிதக்கத் தொடங்கிவிட்டன. சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் நீர் சூழ்ந்து மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டதால் 10 ஆயிரம் பயணிகளுடன் 10 ரயில்கள் பல மணி நேரங்கள் அப்படியே ஸ்தம்பித்து நிற்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

லுயோங் என்ற பகுதியில் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் வெள்ளம் புகாமல் திசை திருப்பும் வகையில் அணைக்கட்டு ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்ததால் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் பழுதாகி அவசர சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன நாளிதழ்கள் தெரிவித்துள்ளன. ஜெங்ஜு என்ற ஊரில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இங்கு ஓராண்டில் பெய்யக் கூடிய மழை 3 நாட்களில் கொட்டித்தீர்த்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, கனடாவில் கடுமையான வெப்ப அலை வீசுவதும் ஜெர்மனி, சீனாவும் வெள்ள பாதிப்பில் சிக்கித்தவிப்பதும் பருவ நிலை மாற்றத்தின் விளைவே என நிபுணர்கள் கணித்துள்ளனர் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com