வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் மாயம்

வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் மாயம்

வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் மாயம்
Published on
வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை 18 பேர் வெள்ளத்தில் மாயமாகி உள்ள நிலையில் அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமின்றி 780 ஹெக்டேர் பரப்பிலான நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com