சரியும் வீடுகள்.. வெள்ளக்காடாக மாறிய ஜெர்மனியின் நகரங்கள் - பேரிடரின் புகைப்பட தொகுப்பு

சரியும் வீடுகள்.. வெள்ளக்காடாக மாறிய ஜெர்மனியின் நகரங்கள் - பேரிடரின் புகைப்பட தொகுப்பு
சரியும் வீடுகள்.. வெள்ளக்காடாக மாறிய ஜெர்மனியின் நகரங்கள் - பேரிடரின் புகைப்பட தொகுப்பு
ஜெர்மனியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு ஜெர்மனியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜெர்மனி மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பல கட்டடங்கள் இடிந்து விழும் சூழலில் உள்ளது.
மேற்கு ஜெர்மனியில் உள்ள எர்ஃப்ட்ஸ்டாட்-பிளெசெமில் எனும் கிராமத்தில் மழை வெள்ளத்தால் உருவான பெரிய நிலச்சரிவு ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இப்பகுதியில் 3 குடியிருப்பு கட்டிடங்களும், வரலாற்று கோட்டை ஒன்றும் இடிந்து விழுந்தன. அஹ்ர் ஆற்றின் குறுக்கே உள்ள டெர்னாவ், ஈபிள் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளப்பெருக்கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

#Breaking: Another Footage:

- Everything floating in Austria

- Germany, Belgium, Netherlands, India#BreakingNews #Austria #Belgium #Germany #Vienna #Brussels #Berlin #Netherlands #India #UK #USA #Europe #France #germanyfloods #belgiumfloods pic.twitter.com/oq1NiR0SDe
— International Leaks (@Internl_Leaks) July 18, 2021

இதுவரை ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 133 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com