மிஸ்டர் பீஸ்ட்
மிஸ்டர் பீஸ்ட்முகநூல்

சுயமாக சம்பாதித்து... அசத்திய மிஸ்டர் பீஸ்ட்; உலகின் இளம் வயது கோடீஸ்வரராக ரூ.8,300 கோடிக்கு அதிபதி!

நிறைய பணம் சம்பாதிப்பதும், அதையெல்லாம் நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும்தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று மிஸ்டர் பீஸ்ட் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
Published on

மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார். பரம்பரை சொத்துக்கள் எதுவும் இல்லை, அனைத்தும் இவர் சுயமாக சம்பாதித்தது என்பதுதான் மிக சிறப்பான விடயமே.

மிஸ்டர் பீஸ்ட் ..யூடிபராக இருந்தால் நிச்சயம் இவரது பெயரை கேட்காமல் இருந்திருக்க முடியாது. புதுமையான சவால்கள், பெரிய அளவிலான பரிசுகள் மற்றும் தொண்டு முயற்சிகளுக்காக உலகளாவிய அங்கீகாரம் பெற்றவர்தான் இவர்.

உலகளவில் புகழ்பெற்ற மிஸ்டர் பீஸ்ட்டின் தற்போதைய சொத்தின நிகர மதிப்பு 1 பில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ. 8,300 கோடி) எட்டியுள்ளது. இதில் பரம்பரை சொத்து எதுவும் இல்லை. அதாவது, அவர் தனது 27 வயதிலேயே இந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சொந்தமாக சம்பாதித்தார் என்பது சிறப்பான சம்பவம். 30 வயதிற்குட்பட்ட, உலகின் இளம் வயது கோடீஸ்வரர்களில் 8 ஆவது கோடீஸ்வரர் என்ற அங்கீகாரத்தையும் Mr.பீஸ்ட் பெற்றிருக்கிறார்.

யார் இந்த மிஸ்டர் பீஸ்ட் ?

மே 7 1998, கிரீன்வில்லில் வடக்கு கரோலினாவில் பிறந்த இவர், ”MrBeast6000" என்ற யூடியூப் சேனலை தனது 12 வயதில் தொடங்கினார்.

2016 இல் கிரன்வில் கிறிஸ்டியன் அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு, சிறிது காலம் கல்லூரியில் பயின்றார். ஆனால், முழுநேரமாக Content creator ஆக மாற வேண்டும் என்பதற்காக யூடியூப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஆரம்பகால வீடியோக்கள் வீடியோ கேம், ரியாக்சஸ் வீடியோ, funny games போலதான் இருந்தது. ஆனால், இவரை உலகமே அறிய செய்த அந்த வீடியோ வெளியானது, 2017 ஆம் ஆண்டில் "icounted to 100 000" என்பதுதான். 44 மணிநேரம் எடுத்து 21 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதாக மாறியது அந்த வீடியோ.

MrBeast யூடியூபில் மட்டும் கில்லாடி கிடையாது. அவர் ஒரு திறமையான தொழில்முனைவோரும் கூட. MrBeast, MrBeast Gaming, Beast Reacts மற்றும் MrBeast Philanthropy உள்ளிட்ட அவரது YouTube சேனல்கள் அனைத்தும் 415 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன. அவரது பிரதான சேனலில் மட்டும் 270 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இது உலகிலேயே அதிக சந்தாதாரர்களைப் பெற்ற YouTube சேனலாக என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் பீஸ்ட்
அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொலை.. ட்ரம்ப் கண்டனம்!

”பீஸ்ட் பிலாந்த்ரோபி" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி பல சேவை திட்டங்களை நடத்தி வரும் இவர், ஆயிரக்கணக்கான மக்களுக்கு கண்பார்வை வழங்குதல், லட்சக்கணக்கான மரங்களை நடுதல் போன்ற திட்டங்களை இந்நிறுவனத்தின் மூலம் செய்துவருகிறர் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com