வெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்

வெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்

வெளிநாடு சென்று வசிக்கும் மக்கள் : உலகிலேயே இந்தியர்கள் முதலிடம்
Published on

சொந்த நாட்டை விட்டு வெளிநாடு சென்று வாழும் மக்கள் கணக்கெடுப்பு ஆய்வில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.

உலகெங்கும் பிறக்கும் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சொந்த நாட்டிலேயே வாழ்வதில்லை. ஏராளமான மக்கள் வேலைக்காகவும், படிப்பிற்காகவும், மாற்றத்திற்காகவும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்வோரில் பலர் வெளிநாடுகளிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் மக்களின் கணெக்கடுப்பு புள்ளி விவரங்களை மிக்ரேஷன் எனும் சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகமெங்கிலும் வெளிநாடுகள் சென்று வாழும் மக்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். உலகமெங்கிலும் சுமார் 17.5 மில்லியன் இந்தியர்கள் பரவி வாழ்கின்றனர். இதில் பெரும்பாலானோர் அமெரிக்காவில் தான் இருக்கின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து நாட்டினருமே அமெரிக்காவிற்கே அதிகம் இடம்பெயருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழும் மக்களில் 3ல் இரண்டு பேர் வேலைக்காக சென்றவர்கள். அமெரிக்காவில் இருந்து மட்டும் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு அங்கு வாழும் இந்தியர்கள் மூலம் சுமார் 78.6 பில்லியன் டாலர்கள் அனுப்பட்டுள்ளன. 

இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு 67.4 மில்லியன் டாலர்களை சீனர்கள் அனுபியுள்ளனர். அதைத்தொடர்ந்து மெக்ஸிகோ நாட்டை சேர்ந்தவர்கள் 35.7 மில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து உலகம் முழுவதுக்கும் சுமார் 689 மில்லியன் டாலர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியர்களை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று வசிக்கும் மக்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் மெக்ஸிகோ நாட்டு மக்களும், அதற்கு அடுத்தபடியாக சீனர்களும் உள்ளனர். மெக்ஸிகோவில் இருந்து 11.8 மில்லியன் மக்களும், சீனாவில் இருந்து 10.7 மில்லியன் மக்களும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com