விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியில் ஒரு 'பிரகாசமான புள்ளி' - என்ன தெரியுமா அது?

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியில் ஒரு 'பிரகாசமான புள்ளி' - என்ன தெரியுமா அது?
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியில் ஒரு 'பிரகாசமான புள்ளி' - என்ன தெரியுமா அது?

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமியில் ஒரு 'பிரகாசமான புள்ளி' தோற்றமளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விண்வெளி வீராங்கனை ஒருவர் .

இத்தாலி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பூமியில் ஒரு 'பிரகாசமான புள்ளி' தோற்றமளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பிரகாசமான புள்ளி போன்று காணப்படுவது இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் என அவர் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி கூறுகையில், ''நெகேவ் பாலைவனத்தில் ஒரு பிரகாசமான புள்ளி. பகலில் மனிதனால் உருவாக்கப்பட்ட விளக்குகளைப் பார்ப்பது மிகவும் அசாதாரணமானது.  சூரியனில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெறுவதற்கான தொழில்நுட்பங்களில் ஒன்றாக இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் உள்ளது'' என்று தகவல் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: யாருகிட்ட ஃபைன் கேக்குறீங்க” : போலீசாருக்கே தண்ணி காட்டிய EB லைன்மேன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com