நிலக்கரி சுரங்கத்தில் மீட்பு நடவடிக்கை
நிலக்கரி சுரங்கத்தில் மீட்பு நடவடிக்கைபுதியதலைமுறை

அசாம் | நிலக்கரி சுரங்கத்தை வெள்ளம் சூழந்ததால் சிக்கிய 9 தொழிலாளர்கள்.. ஒருவரின் உடல் மீட்பு

அசாம் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் நீர் மூழ்கிய நிலையில் அதிலிருந்த 9 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 8 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Published on

அசாம் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் நீர் புகுந்த நிலையில் அதில் சிக்கிய 9 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், 8 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அசாமின் திமா ஹசாவோவில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. அதில் தொழிலாளிகள் பலர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட 9 தொழிளார்களில் நிலை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களைத் தேடுவதற்காக மீட்புக் குழுக்கள் முடுக்கி விடப்பட்டது.

கடற்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை ஆகிய குழுக்கள் மற்றும் டைவிங் மீட்புக்குழுக்கள் இணைந்து 9 தொழிலாளர்களை தேடும் பணியில் இறங்கினர்.

நிலக்கரி சுரங்கத்தில் மீட்பு நடவடிக்கை
"அந்தப் பொண்ணு உன்ன ஏமாத்திடுவா"... மகனுக்கு தந்தை கொடுத்த ட்விஸ்ட்..!

இவர்களின் தீவிரமான தேடுதலில், மூழ்கிய ஒன்பது தொழிலாளர்களில் ஒருவரின் உடல் இன்று காலை மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டது. மீதமுள்ள 8 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், அவர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ”இந்த சுரங்கம் சட்டவிரோதமானது என்று தெரிகிறது, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த முயற்சியில் இந்திய இராணுவம், NDRF மற்றும் கோல் இந்தியாவிலிருந்து ஒருகுழு மீட்பு பணிகளுடன் சேர்ந்து தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com