கருப்புப் பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க உலக நாடுகள் வலியுறுத்தல்
ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.
புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுரத் தாக்கு தலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செயல்படுத்தியது. இதையடுத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும் உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறது.
அதோடு கடந்த சில நாட்களுக்கு முன், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்தியா விமானப்படை குண்டு வீசி தாக்கியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை, கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அதன்படி, அவன் உல களவில் பயணம் செய்யவும் உலக நாடுகளுடன் ஆயுத விற்பனை செய்ய தடைவிதிக்கவும் சொத்துகளை முடக்கவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சி லில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளன.