உலகம்
ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இருதரப்பும் துப்பாக்கிச்சண்டையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. அரசு படையினரை தலிபான் தீவிரவாதிகள் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டபோது, கிழக்கு பகுதியான நங்கர்ஹாரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், தலிபான்கள் உள்பட 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
படுகாயமுற்றோரில் மேலும் 4 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. நங்கர்ஹாரில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.