\
“முடக்குவாதம் என்னை முடக்கி விடாது” - வாயால் பெயிண்ட் டிஜிட்டல் ஓவியம் வரையும் ஓவியர்

“முடக்குவாதம் என்னை முடக்கி விடாது” - வாயால் பெயிண்ட் டிஜிட்டல் ஓவியம் வரையும் ஓவியர்

“முடக்குவாதம் என்னை முடக்கி விடாது” - வாயால் பெயிண்ட் டிஜிட்டல் ஓவியம் வரையும் ஓவியர்
Published on

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஓவியக்கலைஞரான ஹென்றி ஃப்ரேசர் வாயால் பெயிண்ட் பிரஷ்ஷை பிடித்து டிஜிட்டல் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

‘முடக்குவாதம் என்னை முடக்கி போட்டாலும் எனது கலை தாகத்தை முடக்கவே முடியாது!’ என சொல்கிறார் அவர். அது இணையவெளியில் பரவலாக இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

“இது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நான் வரைந்துள்ள டிஜிட்டல் ஓவியம். நான் படுத்த படுக்கையாக இருந்தாலும் சின்ன முயற்சி மாற்றத்திற்கு வித்திடும். அப்படித்தான் வாயால் பிரஷ் பிடித்து வரைய ஆரம்பித்தேன்” என தெரிவித்துள்ளார் அவர். ஐபாட் உதவியுடன் டிஜிட்டல் ஓவியங்களை அவர் வரைந்து வருகிறார். 

நெட்டிசன்கள் தங்களது திறமைகளை இணையவெளியில் பரவலாக கவனம் பெறுவது வழக்கம். அதில் ஹென்றி ஃப்ரேசர் தனி ரகம். அவரது டிஜிட்டல் ஆர்டில் டீயும், பிஸ்கட்டும் இடம் பெற்றுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com