''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ

''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ
''பாய்ந்து வந்து அர்னால்ட் முதுகில் உதைத்த நபர்'' - வீடியோ

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான அர்னால்டை ஒருவர் முதுகில் உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்கள் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருப்பவர் அர்னால்ட். தற்போது 71 வயதாகும் அர்னால்ட் கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ளார். 

இந்நிலையில் இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 'அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா' என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அங்குள்ள நிர்வாகிகளுடன் விளையாட்டு தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது அர்னால்டின் முதுகில் ஒருவர் பலமாக உதைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அர்னால்டும் அவரது பாதுகாவலர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

உடனடியாக உதைத்த நபரை பாதுகாவலர் இருவர் மடக்கி பிடித்து அங்கிருந்து இழுத்துச் சென்றார். பின்னர் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அர்னால்டை முதுகில் உதைக்கும் அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அர்னால்டை உதைத்த அந்த நபர் யார்? ஏன் தாக்குதல் நடத்தினார் என்பது இதுவரை தெரியாத நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com