வன்முறைக்கு மத்தியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தல்.. ராணுவ ஆதரவு கட்சி வெற்றி!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த முதல் கட்ட தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் ((PML- N)) கட்சி 9 இடங்களை வென்றுள்ளது. மீதமுள்ள 4 இடங்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி ((PPP)) கைப்பற்றி உள்ளது. பெருமளவிலான முறைகேடுகள், வன்முறைகளுக்கு இடையே 13 தொகுதிகளுக்கு கடந்த 27ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் உள்ள 45 இடங்களுக்கு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே, அவாமி கூட்டு நடவடிக்கைக் குழு ((Joint Awami Action Committee)) , சர்ச்சைக்குரிய 12 அகதிகள் தொகுதிகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறது. இதற்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஒடுக்குமுறையால் 2 மாதங்களாக வன்முறைகள் நீடிக்கிறது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

