ஆர்மீனியா - அஜர்பைஜான் நாடுகள் இடையே மீண்டும் மோதல்: ஐ.நா அச்சம்

ஆர்மீனியா - அஜர்பைஜான் நாடுகள் இடையே மீண்டும் மோதல்: ஐ.நா அச்சம்
ஆர்மீனியா - அஜர்பைஜான் நாடுகள் இடையே மீண்டும் மோதல்: ஐ.நா அச்சம்

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் இடையே நீண்ட காலமாக குறிப்பிட்ட பகுதியை சொந்தம் கொண்டாடி மோதல் நடைபெற்று வருகிறது.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நாகோர்னோ - கராபாக் பிராந்தியம். மலைகளால் சூழப்பட்ட இந்த பிராந்தியத்தின் பரப்பு 4 ஆயிரத்து 400 சதுரகிலோமீட்டர். இந்த பிராந்தியம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு விடை கிடைக்காததால்தான் 30 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே மோதல் நீடித்து வருகிறது.

சர்வதேச அளவில் இப்பிராந்தியம் அஜர்பைஜானுக்கு சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்மீனியாவை சேர்ந்த பூர்வகுடிகளே இந்த பிராந்தியத்தை கட்டுக்குள் வைத்துள்ளனர். அடிக்கடி இவர்களிடையே மோதல் ஏற்படுவதும் பரஸ்பரம் தாக்கி கொள்வதும் வாடிக்கையானதுதான். ஆனால் இம்முறை தாக்குதல் சற்று தீவிரமடைந்துள்ளது. அஜர்பைஜான் ராணுவம் பொதுமக்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஆர்மீனியா குற்றம்சாட்டுகிறது. பதிலுக்கு அஜர்பைஜானுக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ வாகனங்களை வீழ்த்தியதாகவும் ஆர்மீனியா தெரிவித்துள்ளது.

தற்போது தாக்குதல் நடைபெறும் இப்பகுதி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அதிகளவிலான எண்ணெய் மற்றும் இயற்கை வாயு எடுத்து செல்லும் குழாய்கள் இவ்விடத்தில் உள்ளன. எனவே தொடர் மோதல் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.

எனவே இருதரப்பும் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என ஐ.நா பொது செயலாளர் குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இவ்விவகாரத்தில் தற்போது தலையிட தொடங்கியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com