வேறு பெண்ணை விரும்புவதா? மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி

வேறு பெண்ணை விரும்புவதா? மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி

வேறு பெண்ணை விரும்புவதா? மாணவனைக் கொல்ல கத்தியுடன் வந்த மாணவி
Published on

வேறு மாணவியை, தன்னுடன் படிக்கும் மாணவன் விரும்புவதால் ஆத்திரமடைந்த மாணவி ஒருவர் அவரைக் கொல்ல கத்தியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் இருக்கிறது ஹில்டன் ஹெட் தீவு. இங்குள்ள கலைப் படைப்பாக்கப் பள்ளியில், மாணவி ஒருவர் படித்து வந்தார். அவரது புத்தகப் பைக்குள் இரண்டு கத்திகள் இருந்தன. இதுபற்றி மற்றொரு மாணவி, ஆசிரியரிடம்  தெரிவித்தார். அவர், மாணவியின் பைக்குள் இருந்த 4 இன்ச் நீளமுள்ள 2 கத்திகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

அப்போது, உடன் படிக்கும் மாணவன் வேறொரு பெண்ணை விரும்புவதால், அவனைக் குத்துவதற்காக இந்த கத்திகளை கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார். முந்தைய நாள் இரவே கிச்சனில் இருந்து எடுத்து வைத்துக்கொண்ட தாகத் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com