பல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ

பல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ

பல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ
Published on

 ஷேக் ஒருவர் தனது பற்களில் ஒட்டி இருக்கும் உணவை கொத்தி எடுக்க குருவி ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 

ஃபுல் பிளேட் பிரியாணி சாப்பிட்ட பிறகு நாம் என்ன செய்வோம்? திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு பல்குத்துவோம் இல்லையா? அப்படி பற்களில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை குத்தி எடுப்பதற்கு படாதபாடு பட வேண்டி இருக்கும். இந்த மாதிரியான அசைவ பிரியர்களுக்கு என்றே ஹோட்டல்களில் தனியாக பல்குத்த குச்சி ஒன்றை வைத்திருப்பார்கள். அந்தக் குச்சியில் ஒன்றை எடுத்து பல்லுக்கு வலிக்காமல் மிருதுவாக குத்துவதே ஒரு சுகம். 

ஆனால் நமக்குதான் இந்தப் பிரச்னை எல்லாம். அரபு நாட்டிலுள்ள ஷேக் ஒருவர், தன் பற்களில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை குத்தி எடுக்க குச்சியை பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக குருவியை பயன்படுத்தி வருகிறார். இதற்காகவே அந்தக் குருவிக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுத்து பழைக்கி வைத்திருக்கிறார். அவர் தனது வாயை திறந்து காட்டும் போது பல் வரிசைகளில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை அந்தக் குருவி அழகாக கொத்தி எடுக்கிறது. இதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து அவர் தனது ட்விட்டரில் பதிவேற்றிய உடனே பத்திக் கொண்டுவிட்டது. அப்புறம் என்ன? வைரல்தான். இந்த ஷேக் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com