\
காப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்

காப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்

காப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்
Published on

சாம்சங் நிறுவனத்திடம் சுமார் 6,800 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.

 தனது 5 காப்புரிமைகளை காப்பி அடித்து சாம்சங் பலன் பெற்றதாகவும் இதனால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய அந்நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 6,800 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஆப்பிள் வலியுறுத்தியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட இவ்வழக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதற்கிடையில் இழப்பீட்டு அளவை 200 கோடி ரூபாய்க்குள் கட்டுப்படுத்துமாறு சாம்சங் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் மொத்த ஃபோனுக்கும் இழப்பீடு நிர்ணயிப்பதா அல்லது காப்பி அடித்த பாகத்துக்கு மட்டும் இழப்பீடு நிர்ணயிப்பதா என நீதிபதி முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com