கலிபோர்னியாவில் 10 மில்லியன் டாலருக்கு  அதி நவீன வீடு வாங்கிய ஆப்பிள் சிஇஓ டிம் குக்

கலிபோர்னியாவில் 10 மில்லியன் டாலருக்கு  அதி நவீன வீடு வாங்கிய ஆப்பிள் சிஇஓ டிம் குக்
கலிபோர்னியாவில் 10 மில்லியன் டாலருக்கு  அதி நவீன வீடு வாங்கிய ஆப்பிள் சிஇஓ டிம் குக்

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெற்கு கலிபோர்னியாவின் மேடிசன் கிளப்பில் 9,956 சதுர அடி வீட்டை சுமார் 10 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

முற்றிலும் நவீனமயமாக அலங்கரிக்கப்பட்ட  இந்த வீட்டில், ஐந்து படுக்கையறைகள், ஆறு குளியலறைகள், ஒரு நிர்வாக அலுவலகம், ஒரு ஏசி பார், பில்லியர்ட்ஸ் மேஜை, இரண்டு சமையலறைகள், பார் வசதியுடன் கூடிய நவீன நீச்சல் குளம், ஒரு தீ குழி மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட பார்பிக்யூ ஆகியவை அமைந்துள்ளது. இந்த வீட்டில் இருந்து சாண்டா ரோசா மலைகளையும் ரசிக்க முடியும்.

நைக் நிறுவனர் பில் நைட், திரை நட்சத்திரங்களான கோர்ட்னி கர்தாஷியன் மற்றும் கிரிஸ் ஜென்னர், சூப்பர்மாடல் சிண்டி க்ராஃபோர்ட், இசை கலைஞர் ஸ்கூட்டர் ப்ரான், லோரி லோக்லின் மற்றும் மொசிமோ ஜியானுலி ஆகியோர் இவரின் வீட்டின் அருகே வசிக்கின்றனர். இது மேடிசன் கிளப் என அழைக்கப்படும் ஒரு ரிட்ஸி கேட் சமூகமாகும்.

1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகொண்ட டிம் குக், ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரி எலிசன் போன்ற சக பணக்காரர்களுடன் ஒப்பிடுகையில் எளிமையாக வாழ்வதற்கு பெயர் பெற்றவர். குக்கின் முதன்மையான வீடு, $ 2.3 மில்லியன் மதிப்புள்ள 2,400 சதுர அடி கொண்டது, இது ஆப்பிளின் தலைமையகத்திற்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோவில் அமைந்துள்ளது.

குக் தான் எழுதிய புத்தகத்தில், "நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நினைவூட்டுவதை நான் விரும்புகிறேன், என்னைச் சுமாரான சூழலில் வைத்துக்கொள்வது எனக்கு உதவுகிறது," என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com