’பிரச்னையில் இருக்கிறோம்’ - அண்டார்டிகா பனி உருகுவது குறித்து எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

’பிரச்னையில் இருக்கிறோம்’ - அண்டார்டிகா பனி உருகுவது குறித்து எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
’பிரச்னையில் இருக்கிறோம்’ - அண்டார்டிகா பனி உருகுவது குறித்து எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

அண்டார்டிகாவில் உடைந்து மிதக்கும் பனிப்பாறைகள் குறித்த வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கணக்கிட்டுள்ளனர். அதில் 1994 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 4,000 ஜிகாடான் பரப்புள்ள பனி அடுக்கு அண்டார்டிகாவில் இருந்து இழக்கப்பட்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் சிறிய அளவு இல்லை‌.   

மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டி முற்றிலும் கடலில் உருகினால், அது உலகளவில் கடல் மட்டம் சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் நான்கு தனித்தனி ESA இன் செயற்கைக்கோள் பயணங்களிலிருந்து 25 ஆண்டுகால தரவுகளைப் பயன்படுத்தினர்.

கடந்த 25 ஆண்டுகளில்  அண்டார்டிக் பனிப் படுகையில் பனி உருகுவது சுமாராக ஆறு மடங்கு அதிகரித்துள்ளது எனவும் இந்த அளவு பனி உருகுகிறது என்றால் கடல் மட்டம் அந்த அளவு உயரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகும் அளவு கவலைப்படத்தக்க அளவில் உயர்வது, நாம் பிரச்சனையில் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com