உலகம்
உக்ரைன் போர்: இந்திய மாணவருக்கு காயம் மருத்துவமனையில் அனுமதி?
உக்ரைன் போர்: இந்திய மாணவருக்கு காயம் மருத்துவமனையில் அனுமதி?
கீவ்வில் இந்திய மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்ட அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் இதனை தெரிவித்துள்ளார். “கீவ் நகரில் மாணவர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைனில் கல்வி பயின்று வந்த கர்நாடக மாணவர் ஒருவர் இந்த போரினால் உயிரிழந்தார். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு வரும் பணியை அந்த நாட்டுக்கு அருகே உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவின் நான்கு மத்திய அமைச்சர்கள் முன்னின்று மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
Source: ANI