அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை
Published on

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

லான்கேஸ்டர் பகுதியில் சிறிய கடை ஒன்றினை நடத்தி வரும் ஹர்னிஷ் படேல் என்பவர், அவரது வீட்டு முன்பாக குண்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வேனில் வந்த படேல், வீட்டு முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கன்சாஸ் நகரில் இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com