
நெருப்புக்கோழி ஒன்று பூங்கா ஊழியரை தாக்கும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யாவின் பென்ஸா உயிரியல் பூங்காவில் வரிக்குதிரையும், நெருப்புக்கோழியும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வரிக்குதிரையை இடமாற்றம் செய்வதற்காக பூங்கா ஊழியர் கூண்டுக்குள் சென்றுள்ளார். இதைக் கண்டு ஆவேசமடைந்த நெருப்புக்கோழி அவரை கடுமையாக தாக்கியது.
இதனால் அச்சம் அடைந்த அந்த ஊழியர், அங்கிருந்து ஓடிச் சென்றார். எனினும் அந்த நெருப்புக்கோழி அவரை விடாமல் துரத்திச் சென்று அலகினால் கொத்தி தாக்கியதுடன், கீழே தள்ளி மிதித்தது. இதில் படுகாயமடைந்த அந்த ஊழியர் சில மணி நேர போராட்டத்துக்குப் பின் தப்பி வந்தார். இந்தச் சம்பவம் வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.