நிலநடுக்க மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மெத்தனம்: மெக்சிகோ மக்கள் குற்றச்சாட்டு

நிலநடுக்க மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மெத்தனம்: மெக்சிகோ மக்கள் குற்றச்சாட்டு

நிலநடுக்க மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மெத்தனம்: மெக்சிகோ மக்கள் குற்றச்சாட்டு
Published on

மெக்சிகோவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக பாதிக்க‌ப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த 19 ஆம் தேதி அன்று மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் ‌சிக்கி 331 பேர் உயிரிழந்தனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்‌கள் இடிந்து விழுந்து தரைமட்டாகியுள்ளன. இதனால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கட்டட இடிபாடுகளில்‌ இருந்து சடலங்களை அகற்றும் பணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து‌ நீடித்து வருகிறது.

இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக மெக்சிகோ சிட்டியில் இ‌டிந்து விழுந்த ஜவுளி தொழிற்சாலையின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் மிகுந்த மந்த கதியில் நடந்து வரு‌வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை இப்பகுதியில் இருந்து 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 25 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரின் சடலங்கள் மீட்கப்படாமல்‌ இருப்பதா‌க கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com