உலகம்
சர்வதேச விண்வெளி வீரர்களுக்காக நவீன சமையல் சாதனம் - விண்கலத்தில் அனுப்பிவைப்பு
சர்வதேச விண்வெளி வீரர்களுக்காக நவீன சமையல் சாதனம் - விண்கலத்தில் அனுப்பிவைப்பு
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீரர்கள் உணவுப்பொருட்களை தயாரித்து சாப்பிடுவதற்காக அதிநவீன சமையல் சாதனம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றைத் தயாரித்து சாப்பிடுவதற்காக மாவு, மைக்ரோவேவ் அவன் ஆகியவை அமெரிக்காவின் வர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து 3.7 டன் எடைகொண்ட சைக்னஸ் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டது.
அந்த சமையல் சாதனம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றுடன் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உடை, ஸ்போர்ட்ஸ் கார் உதிரி பாகங்கள் ஆகியவையும் அனுப்பிவைக்கப்பட்டன.