காற்று குமிழ்கள் மூலம் பிளாஸ்டிக்கை ஓரம்கட்டும் புதிய திட்டம்!

காற்று குமிழ்கள் மூலம் பிளாஸ்டிக்கை ஓரம்கட்டும் புதிய திட்டம்!
காற்று குமிழ்கள் மூலம் பிளாஸ்டிக்கை ஓரம்கட்டும் புதிய திட்டம்!

நெதர்லாந்தின் AMSTERDAM நகரில் உள்ள நதிகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய பபுல் பேரியர் (Bubble Barrier) என்ற திட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கால்வாய்களில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை‌ எளிதில் அகற்றமுடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நதி மற்றும் கால்வாய்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் நீர்வளத்தை பாதிப்பதோடு, அங்கு வாழும் உயிரினங்களையும் அழித்துவிடுகிறது. இதற்காக பபுல் பேரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி கால்வாயின் குறுக்கே நீர் குமிழிகள் மேலெழும்பும்படி ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் கால்வாயிலுள்ள குப்பைகள் அனைத்தும் ஓரத்திற்கு தள்ளப்படுகின்றன. அதன்பிறகு அவற்றை எளிதில் வெளியேற்றமுடியும் என கூறப்படுகிறது. 

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 42 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும், கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் நீர் குமுழிகள் போன்ற அமைப்பு படகையோ, நதியில் வாழும் மீனையோ எந்த வகையிலும் பாதிக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com