மசூத் அசார் வேறு மருத்துவமனை மாற்றம் - உளவுத்துறை தகவல்

மசூத் அசார் வேறு மருத்துவமனை மாற்றம் - உளவுத்துறை தகவல்
மசூத் அசார் வேறு மருத்துவமனை மாற்றம் - உளவுத்துறை தகவல்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ராணுவ மருத்துவமனையிலிருந்து பகவல்பூர் முகாமுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் பாலாகோட்டில் கடந்த 27ஆம் தேதி இந்திய விமானப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்ததாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியானது. ஆனால், மசூத் அசார் உயிருடனிருப்பதாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் குறித்து வெளியான வதந்திகளையும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மறுத்துள்ளது. 

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த மசூத் அசார்‌, அங்கிருந்து நேற்றிரவு பகவல்பூரில் இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முகாமுக்கு மாற்றப்பட்டதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினரிடம் இம்ரான் கான் அடிபணிந்து விட்டதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, ராணுவ மருத்துவமனையிலிருந்து மசூத் அசார் முகாமுக்கு மாற்றப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com