அமெரிக்க மாணவிகள் மீது ஆசிட் வீச்சு - பிரான்ஸில் பயங்கரம்
அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்கு சுற்றுலா வந்த நான்கு மாணவிகள் மீது ஆசிட் வீசிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் நான்கு பேர் பிரான்ஸுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். மெர்சிலி ரயில் நிலையத்தில் நான்கு பேரும் நின்றுக்கொண்டிருந்த போது, அங்கு வந்த பெண் ஒருவர் தான் வைத்திருந்த ஆசிட்டை அவர்கள் மீது வீசினார். இதில் இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் தெளித்தது. மற்ற இருவரின் உடல் பகுதிகளில் ஆசிட் பட்டதால் நான்கு பேரும் வலியில் துடித்தனர். இதையடுத்து படுகாயமடைந்த நான்கு மாணவிகளையும் போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவிகள் மீது ஆசிட் வீசிய 41வயதுமிக்க பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் எதனால் மாணவிகள் மீது ஆசிட் வீசினார் என தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.